Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு!

T

The Leader Desk

நவம்பர் 18, 2019 • 6:44 PM

ஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கும் என்று பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
  • வது திருத்தத்தன் கீழ் பொதுத் தேர்தலில் தெரிவாகும் அரசாங்கத்தை நான்கரை வருடங்கள் நிறைவடையும் முன்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை.
எழுத்து அளவு:

ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

19வது திருத்தத்தன் கீழ் பொதுத் தேர்தலில் தெரிவாகும் அரசாங்கத்தை நான்கரை வருடங்கள் நிறைவடையும் முன்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை. இதனடிப்படையில் குறித்த நான்கரை வருடங்கள் நிறைவடையும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படல் வேண்டும்.

எவ்வாறாயினும் துரிதமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கும் என்று பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதே வேளை  உரிய காலத்திற்கு முன்னர் அவசரமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிாப்பை தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இன்று அநுராதபுரத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த சில்வாவின் வீட்டில் இடம்பெற்ற அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவதற்கு ஆதரவை வழங்காதிருப்பதற்குத் தீர்மானித்துள்ள ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் இன்று இரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையில் கொழும்பில் இடம்பெறும் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...