அவ்வீட்டுச் சொந்தக்காரரான சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சுதந்திர ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“வீண்விரய அபிவிருத்தியும், மோசடிகளும்” என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வழங்கி வைத்தமையே இத்தாக்குதலுக்கு காரணம் என சுதந்திர ஊடகவியலாளர் விஜேரத்னவின் மனைவி மதுஷா பிரியங்கிகா தெரிவித்தார்.
விஜேரத்னவின தலையில் தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், மற்றொருவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றதாகவும், இத்தாக்குதல் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளராட்சி மன்ற அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட “கொட்டன்” களைத் தேடி பொலிஸார் வலை வீச்சு!
T
The Leader Desk
நவம்பர் 15, 2019 • 6:09 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அவ்வீட்டுச் சொந்தக்காரரான சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
- அவர் மீது வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான சுதந்திர ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

