Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலட்சக்கணக்கான இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகை! உண்மை பொய் இதோ!!

T

The Leader Desk

நவம்பர் 15, 2019 • 6:06 PM

இலட்சக்கணக்கான இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகை! உண்மை பொய் இதோ!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையர்களும், இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள ஆயிரக்கணக்கானவர்களும் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகக் கூறி தேர்தல் சட்டங்களை மீறி குறித்த கட்சியின் சில செயற்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக தற்போது பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
  • “2019ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர்களான இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டோர் 809பேரே என குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
  • ம் ஆண்டின் நவம்பர் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை இரட்டைப் பிரஜாவுரிமையுடையோரின் எண்ணிக்கை 723 ஆகும்.
எழுத்து அளவு:

இலங்கையர்களும், இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள ஆயிரக்கணக்கானவர்களும் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகக் கூறி தேர்தல் சட்டங்களை மீறி குறித்த கட்சியின் சில செயற்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக தற்போது பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தேசிய தொலைக்காட்சி குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்களைக் குறிப்பிட்டுக் காட்டி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“2019ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த  இலங்கையர்களான இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டோர் 809பேரே என குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2018ம் ஆண்டின் நவம்பர் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை இரட்டைப் பிரஜாவுரிமையுடையோரின் எண்ணிக்கை 723 ஆகும்.

2019ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 39,553 பேர்களாகும். 2018ம் ஆண்டின் நவம்பர்  முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 38,325 பேர்களாகும்”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...