Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் அமைச்சர் ரிஷாத்

T

The Leader Desk

நவம்பர் 15, 2019 • 3:01 PM

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் அமைச்சர் ரிஷாத்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும்.
  • இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் ஈடுபடுவோருக்கு 2003 ஆம் ஆண்டு 60 ஆம் பிரிவின் 9 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், 5000 - 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும்.

எனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமைமா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுமதியின்றி கோதுமாமாவின் விலை கூட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

சட்டவிரோதமாக விலையதிகரிப்பைச் செய்வதனூடாக நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவோர் தொடர்பில் கண்காணிக்குமாறு அவர் கடந்த 11 ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் ஈடுபடுவோருக்கு 2003 ஆம் ஆண்டு 60 ஆம் பிரிவின் 9 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஒருவருட  சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், 5000 - 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...