Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஊடக நிறுவனம் ஒன்றுக்கு தாக்குதல்!” - விமலை விசாரிக்க வேண்டும்.

T

The Leader Desk

நவம்பர் 14, 2019 • 5:51 PM

ஊடக நிறுவனம் ஒன்றுக்கு தாக்குதல்!” - விமலை விசாரிக்க வேண்டும்.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • ஊடக நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த இடத்திற்கும் தாக்குதலை மேற்கொள்வது படு மோசமான செயற்பாடாகும்.
  • இந்த எதிர்வு கூறல்கள் தொடர்பில் சரியான உறுதியான தகவல்கள் இருக்குமாயின் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துவதை விட மொட்டு கட்சியினர் பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் ஆணைக்குழுவிடத்திலும் அல்லது தேர்தல் கண்காணிப்பு குழுவிடத்தில் முறைப்பாடு செய்திருக்கலாம்.
எழுத்து அளவு:

ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்நாட்களில், சில நேரங்களில் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி நாட்டிற்கு கூறுவது அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக பல்வேறு பிரசார மற்றும் ஏனைய சதிகளையும் எதிர்தரப்பினர் செயற்படுத்தி வருகின்றார்கள் என்றேயாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவிக்கும் வீடியோ ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அது வெளியிடுவதற்கு தயாராக உள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இதற்கு முன்னர் எதிர்த்தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வுகூறல்களைத் தெரிவித்து கூறியிருந்தனர்.

இந்த எதிர்வு கூறல்கள் தொடர்பில் சரியான உறுதியான தகவல்கள் இருக்குமாயின் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்துவதை விட மொட்டு கட்சியினர் பொலிஸ் நிலையத்திலும், தேர்தல் ஆணைக்குழுவிடத்திலும் அல்லது தேர்தல் கண்காணிப்பு குழுவிடத்தில் முறைப்பாடு செய்திருக்கலாம்.

விமல் வீரவங்சவின் இந்தக் குற்றச்சாட்டு எனில் சேறுபூசும் வீடியோவை விட கடுமையான குற்றச்சாட்டாகும். தாக்குதல் மேற்கொள்ளப்படப் போகின்றது எனக் கூறுவது ஊடக நிறுவனம் ஒன்றின் மீதாகும். ஊடக நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த இடத்திற்கும் தாக்குதலை மேற்கொள்வது படு மோசமான செயற்பாடாகும்.

இந்தக் குற்றத்தைப் பற்றி விமல் வீரவங்சவுக்குத் தெரிந்த தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு வழங்க வேண்டும். பொலிஸாரும் உடனடியாக இது தொடர்பில் அவரிடம் விசாரிக்க வேண்டும். அவ்வாறானதொரு குற்றம் இடம்பெற உள்ளதாயின் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விமல் வீரவங்க தெரிவித்திருப்பது தாக்குதல் எனக் கூறி நாட்டில் தீயை மூட்டுவதாயின் அது தொடர்பிலும் பொலிஸார் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஊடக நிறுவனம் ஒன்றுக்கு தாக்குதல்!” - விமலை விசாரிக்க வேண்டும். | Tamil Leader | We Lead the Nation