Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டாபயவின் குடியுரிமை விவகாரம் : அமெரிக்க சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரணவும் ஏற்றுக் கொண்டது!

T

The Leader Desk

நவம்பர் 13, 2019 • 5:53 PM

கோட்டாபயவின் குடியுரிமை விவகாரம் : அமெரிக்க சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரணவும் ஏற்றுக் கொண்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என இன்று புதன்கிழமை மீண்டும் ஒரு தடவை உறுதியாகியுள்ளது.
  • கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கத் தூதரகத்தில் இரட்டைப் பிரஜா உரிமையினை நீக்கிக் கொள்வதற்கான சத்தியக்கடதாசியை ஒப்படைத்ததாக அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் இதற்கு முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
  • இன்று தெரண ஊடகவியலாளர் இந்தீவரி மற்றும் அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் நென்சி வென்ஹோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற நேர்காணலின் போதே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

என இன்று புதன்கிழமை மீண்டும் ஒரு தடவை உறுதியாகியுள்ளது. இன்று தெரண ஊடகவியலாளர் இந்தீவரி மற்றும் அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் நென்சி வென்ஹோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற நேர்காணலின் போதே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கத் தூதரகத்தில் இரட்டைப் பிரஜா உரிமையினை நீக்கிக் கொள்வதற்கான சத்தியக்கடதாசியை ஒப்படைத்ததாக அமெரிக்க தூதுவராலய பேச்சாளர் இதற்கு முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் theleader.lk க்குத் தெரிய வரும் விடயம் யாதெனில், கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை அமெரிக்க தூதரகத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே ஒப்படைத்துள்ளார் என்பதாகும்.

இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் இடம்பெறப் போகின்றது என்பதை அறிந்து கொண்ட பின்னரும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் வழங்கப்படும் என ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் வழங்கிய இணக்கப்பாட்டையும் அடுத்தே அந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் நியமனம் கிடைக்காவிட்டால் தான் அமெரிக்க குடியுரிமையினை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் ராஜபக்ஷ குடும்பத்திடம் அழுத்தங்களைக் கொடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...