Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோத்தாவின் ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது நிரூபணம்! -மங்கள

T

The Leader Desk

நவம்பர் 13, 2019 • 5:20 PM

கோத்தாவின் ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது நிரூபணம்! -மங்கள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு அறிக்கைகளின் பிரகாரம் கோத்தாபாய ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை விடவும் 8 சதவீதம் பின்னணியிலேயே இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஆனால் நாமல் ராஜபக்ஷ காண்பித்த கடவுச்சீட்டில் 'கன்செல்' என்று எழுதப்பட்டிருந்தது.
  • தேர்தலில் எப்படியும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைய மாட்டார்.
எழுத்து அளவு:

ஆனால் எமது நாட்டின் குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய தவறான முன்னுதாரணத்தை நாம் வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ எவரேனும் வந்து தேர்தலில் போட்டியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு அறிக்கைகளின் பிரகாரம் கோத்தாபாய ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை விடவும் 8 சதவீதம் பின்னணியிலேயே இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் எப்படியும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைய மாட்டார். ஒருவேளை வெற்றி பெற்றால் கூட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் நேரும்.

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டு இலங்கையின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினாலும் கூட, அதற்காக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது நிரூபனமாகியிருக்கின்றது.

கோத்தாபயவின் அமெரிக்க கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாகியுள்ளது என்று நாமல் ராஜபக்ஷ அதனை வெளியிட்டார். 

ஆனால் உலகின் எந்தவொரு நாட்டிலும் கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாக மாற்றப்படும் போது அதன்மீது 'கன்செல்ட்' என்றே குறிப்பிடப்படும். ஆனால் நாமல் ராஜபக்ஷ காண்பித்த கடவுச்சீட்டில் 'கன்செல்' என்று எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து இது பொய்யான ஆவணம் என்பது தெளிவாகின்றது.

அதேபோன்று கோத்தாபயவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொண்டமை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஆனால் அவ்வாறான ஆவணங்கள் எவையும் கையளிக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே இது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல. ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷ என்ன செய்தாலும் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என  அவர் இதன்போது தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...