Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஏனையோர் எழுதித்தருவதை பார்த்து வாசிப்பதற்காக நான் இங்கு வரவில்லை! சஜித்

T

The Leader Desk

நவம்பர் 13, 2019 • 5:16 PM

ஏனையோர் எழுதித்தருவதை பார்த்து வாசிப்பதற்காக நான் இங்கு வரவில்லை! சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.
  • காலி நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் 151 ஆவது தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  • அங்கு அவர் மேலும் கூறியதாவது: இன்று காலியில் நடைபெறும் இத்தேர்தல் பிரசாரக்கூட்டம் எனறு 151 ஆவது கூட்டமாகும்.
  • காலி மாவட்டத்திற்கென பிரத்யேகமான அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்து, 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 17 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதியாகிய எனது விசேட கண்காணிப்பின் கீழ் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
எழுத்து அளவு:

எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.

 எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

காலி நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் 151 ஆவது தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்று காலியில் நடைபெறும் இத்தேர்தல் பிரசாரக்கூட்டம் எனறு 151 ஆவது கூட்டமாகும். எமது நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்திய ஒரே ஜனாதிபதி வேட்பாளர் நானே என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

காலி மாவட்டத்திற்கென பிரத்யேகமான அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்து, 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 17 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதியாகிய எனது விசேட கண்காணிப்பின் கீழ் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றேன்.

அதேபோன்று சிறியளவில் மழை பெய்தாலும் கூட, இப்பிரதேசம் நீரில் மூழ்கும் நிலை காணப்படும் நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். காலி துறைமுகம், கொக்கல விமானநிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வோம்.

அதுமாத்திரமன்றி பலவருடகாலமாக எந்தவொரு அரசாங்கமும் செயற்படுத்த முன்வராத, குப்பைமேட்டை அகற்றுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். ஒட்டுமொத்தமாக காலியை ஒரு நவீன நகரமாக்குவதற்கான பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்.

மிகக்குறுகிய காலத்தில் வறுமையை இல்லாதொழிப்பதற்கான சமுர்த்தியுடன், ஜனசவிய வேலைத்திட்டத்தையும் செயற்படுத்துவோம். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இரு சீருடைத்துணிகளும், சப்பாத்தும், மதிய உணவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். 

விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இலவசமாக உரம் வழங்கப்படும்.  

மேலும் சிறுவயதிலேயே துறவறம்பூணும் பௌத்த பிக்குகளின் பிரிவெனா கல்வி மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்வேன். 

அதுமாத்திரமன்றி நான் இந்த மேடையில் ஏறியதும் சிறுமியொருவர் யோசனையொன்றைப் பரிந்துரைத்தார்.

அதாவது 55 வயதிற்கு மேற்பட்டோருக்கு நிவாரணத்தொகை ஒன்றையும், 18 – 25 வயதிற்கு இடைப்பட்டோரிற்கு குறைந்த விலையில் டேட்டா பக்கேஜ் ஒன்றையும் வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். 

எனவே ஏனையோர் எழுதித்தருவதை பார்த்து வாசிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. அனைத்துத் தரப்பினரதும் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. 

அதன்படி இளையோருக்கு குறைந்த விலையில் டேட்டா பக்கேஜை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். எதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.

 எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...