Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டாபயவின் பிரஜா உரிமை : உண்மை - பொய் என்ன? பீபீசி சிங்கள சேவையின் ஆய்வு

T

The Leader Desk

நவம்பர் 12, 2019 • 5:31 PM

கோட்டாபயவின் பிரஜா உரிமை : உண்மை - பொய் என்ன? பீபீசி சிங்கள சேவையின் ஆய்வு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குடியுரிமை தொடர்பில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.
  • இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜை அல்ல என்றும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் முன்வைத்தார்.
  • இதற்கான பிரதான காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை நீக்கப்பட்டுள்ளவர்களது பெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படாமையாகும்.
எழுத்து அளவு:

குடியுரிமை தொடர்பில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

இதற்கான பிரதான காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை நீக்கப்பட்டுள்ளவர்களது பெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படாமையாகும்.

எவ்வாறாயினும் கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்ற விடயத்தை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவோா் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜை அல்ல என்றும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் முன்வைத்தார்.

அந்த ஆவணங்கள் தொடர்பிலும் சமூக ஊடகங்கள் ஊடாக கேள்விகள் எழுப்பப்ட்ட போதிலும் சட்டத்தரணி அலி சப்ரி நவம்பர் 10ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை  விலக்கிக் கொள்ளப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை பீபீசி சிங்கள சேவையின் முகநூல் நேரடிநேர்காணலில் கலந்து கொண்டு கூறும் போது, “எந்தவிதமான ஆவணங்களையும் நாம் உத்தியோகபூர்வமாக நாம் கேட்டிருக்கவில்லை. குறைந்தது அவரது அடையாள அட்டையின் பிரதியைக் கூட நாம் கேட்கவில்லை. யாரிடமும் அவ்வாறான ஆவணங்களை நாம் கோரவில்லை என்ற விடயத்தையே நாம் கூற வேண்டியுள்ளது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...