பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப் போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சுட்டிக் காட்டியுள்ளார்.
குருநாகல் கல்கமுவ பொதுச் சந்தையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூட் ஷிரமன்னவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி விடுவித்தமை தொடர்பில் சிவில் சமூகத்திடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் மற்றும் குடு வியாபாரிகளுக்கும் தான் எந்த வகையிலும் ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தொடர்ந்தும் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,
“வரும் 16ம் திகதியின் பின்னர் தீவிரவாதிகளுக்கும், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களுக்கும், கொலை காரர்கள், தூள் வியாபாரிகள், சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை. இவ்வாறான குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்களை ஒரு போதும் ஜனாதிபதியாக எனது பதவிக் காலத்தினுள் விடுதலை செய்யப் போவதில்லை.
அவ்வாறானவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்கி ஒழுக்கமிகு நாட்டை உருவாக்கி அபிவிருத்தி செய்து புதிய இலங்கையை நாம் உருவாக்குவோம்” என்றார்.
ஜனாதிபதி மைத்திரியின் பொது மன்னிப்பு முன்னுதாரணமாக அமைந்து விடக் கூடாது! - சஜித்
T
The Leader Desk
நவம்பர் 12, 2019 • 5:25 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப் போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சுட்டிக் காட்டியுள்ளார்.
- இவ்வாறான குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்களை ஒரு போதும் ஜனாதிபதியாக எனது பதவிக் காலத்தினுள் விடுதலை செய்யப் போவதில்லை.
- குருநாகல் கல்கமுவ பொதுச் சந்தையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

