Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஷங்கரிலா கொமிஸ் மோசடி மூலம் “தங்காலை பே” ஹோட்டல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது!

T

The Leader Desk

நவம்பர் 12, 2019 • 5:22 PM

ஷங்கரிலா கொமிஸ் மோசடி மூலம் “தங்காலை பே” ஹோட்டல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட மோசடி செய்தமை தொடர்பில் தெளிவான பதிலை நாட்டுக்கு வழங்காது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வாக்கு கேட்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எந்த உரிமையும் இல்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
  • இந்தத் திருட்டுக் கும்பலுக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சரியான தீா்ப்பை இம்மாதம் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வழங்குமாறு இந்நாட்டு மக்களிடத்தில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
  • பிரித்தானிய யுகத்திலிருந்து இந்தக் காணியில் அமைந்திருந்த இராணுவ தலைமையகம் அமைந்திருந்த இரண்டு காணிகள் இரண்டு உறுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • ஆறு ஏக்கரைக் கொண்ட ஒரு காணி 75 மில்லியன் டொலருக்கு (8250 மில்லியன் ரூபாய்) விற்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கூட மோசடி செய்தமை தொடர்பில் தெளிவான பதிலை நாட்டுக்கு வழங்காது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வாக்கு கேட்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எந்த உரிமையும் இல்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திருட்டுக் கும்பலுக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தின்  மூலம் சரியான தீா்ப்பை இம்மாதம் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வழங்குமாறு இந்நாட்டு மக்களிடத்தில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை கோட்டே சோசீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்ந அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தலையிட்டு வெளிநாட்டவர்களுக்கு உறுதியின் மூலம் வழங்கப்பட்ட ஒரு அங்குல நிலத்தையேனும் காட்டுமாறு ராஜபக்ஷக்களிடமும், அவர்களது சேல்ஸ் ரெப்களிடமும் சவால் விடுவதாகவும் அமைச்சர் சம்பிக்க இதன் போது மேலும் குறிப்பிட்டார்.

பிரித்தானிய யுகத்திலிருந்து இந்தக் காணியில் அமைந்திருந்த இராணுவ தலைமையகம் அமைந்திருந்த இரண்டு காணிகள் இரண்டு உறுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆறு ஏக்கரைக் கொண்ட ஒரு காணி 75 மில்லியன் டொலருக்கு (8250 மில்லியன் ரூபாய்) விற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு காணிகள் விற்பனை செய்யப்படுவதாக நெஞ்சில் அடித்துக் கொள்ளும் ராஜபக்ஷ இவ்வாறுதான் காணிகளை விற்றுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...