Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஷிரமந்த ஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரதன தேரராகும்.

T

The Leader Desk

நவம்பர் 11, 2019 • 5:12 PM

ஷிரமந்த ஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரதன தேரராகும்.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வந்தவர் அத்துரலிய ரத்ன தேரராகும்.
  • அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அத்துடன் ரத்ன தேரரினால் இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கையுடன் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வந்தவர் அத்துரலிய ரத்ன தேரராகும்.

ஆயுள் தண்டவை வழங்கப்பட்டிருந்த இவ்வாறானர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது  தொடர்பில்  ஜனாதிபதி  மீது  கடும் எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளதுடன்,  இந்நிலையினுள்  இவ்விடயத்திற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணங்களைத் தெளிவு படுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக நிறுவனங்களுக்கு விஷேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமன் ஜூட் எண்டனி என்பவர் தொடர்பில் இருந்த நியாயமான விடயங்களை மனிதாபிமான முறையில் கவனத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமயத் தலைவர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு எழுத்துமூலமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக முக்கிய பங்கெடுத்து சிறப்பான செயற்பாடுகளைச் செய்து தேவையான தலையீடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் மேற்கொள்ளப்பட்டதோடு, அவரால் இவ்விளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கவும்  வைத்துள்ளார்.

அத்துடன் ரத்ன தேரரினால் இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கையுடன் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஷிரமந்த ஜூட் எண்டனிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது ரதன தேரராகும். | Tamil Leader | We Lead the Nation