, அக்கூட்டத்திற்கான முழு அனுசரணையினை வழங்கியிருப்பது, கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பில் ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட முஹம்மது இபுறாஹிம் அஹமட்டின் மாமாவுமான அலாவுதீன் ஜூவலர்ஸ் உரிமையாளர் கோடீஸ்வர வர்த்தகர் அலாவுதீனே என theleader.lk இணையத்திற்கு அறியக் கிடைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர் அலாவுதீன் தனது மன்னாரில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதியை அழைத்துச் சென்று விருந்து வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 21 ஞாயிற்றுக் கிழமை உயிர்த்த தின நிகழ்வு ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது நாடு முழுவதிலும் ஆறு இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, குண்டுதாரிகளுக்கு குண்டுகளைத் தயாரிப்பதற்காக தனது செப்புத் தொழிற்சாலையிலிருந்து செம்புகளை வழங்கியிருந்ததும் இந்த அலாவுதீனின் மருமகனான முஹம்மது இபுறாஹீம் இல்ஹாம் அஹமட் என்பவரே என தெரிய வந்திருந்தது.
அலாவுதீனின் ஒரே மகள் திருமணம் செய்திருப்பது முஹம்மது இபுறாஹீம் இல்ஹாம் அஹமட் என்பவரையாகும்.
கோட்டாபயவின் மன்னார் பிரசாரக் கூட்டம் : ஷங்கிரிலா குண்டுதாரியின் மாமாவே அனுசரணை!
T
The Leader Desk
நவம்பர் 11, 2019 • 5:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர் அலாவுதீன் தனது மன்னாரில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதியை அழைத்துச் சென்று விருந்து வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
- அலாவுதீனின் ஒரே மகள் திருமணம் செய்திருப்பது முஹம்மது இபுறாஹீம் இல்ஹாம் அஹமட் என்பவரையாகும்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

