Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“கோட்டாபயவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல. மக்கள் நீதிமன்றத்தில் அவரைத் தோற்கடிப்போம்” - ஐதேக

T

The Leader Desk

நவம்பர் 10, 2019 • 5:57 PM

“கோட்டாபயவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல. மக்கள் நீதிமன்றத்தில் அவரைத் தோற்கடிப்போம்” - ஐதேக

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திகதி மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்பதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் நோக்கமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
  • எனினும் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்துகின்றோம்.
  • இலங்கையின் அரசியலமைப்பின் 31ம் பிரிவுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியானவர் இலங்கை பிரஜைகள் மாத்திரமேயாகும்.
  • அவர் 2005ம் ஆண்டு அவரது சகோதரர் ஜனாதிபதி ஆனதன் பின்னர் இலங்கையின் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கு கடைபிடித்த நடைமுறைகள் மோசடியானவையாகும்” என்றார்.
எழுத்து அளவு:

திகதி மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்பதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் நோக்கமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளதோடு, அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மற்றும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மேலும் கூறியதாவது, “எமது வேட்பாளா சஜித் பிரேமதாசா கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பில் அந்தளவு அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் நாம் கோட்டாவை மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்போம்.  மக்கள் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் மூலம் கோட்டாபயவைத் தோற்கடிக்க நாம் முயற்சிக்கப் போவதில்லை. அவ்வாறான வழியில் கோட்டாபயவைத் தோற்படிப்பது தகுதியற்றது என சஜித் பிரேமதாசா நினைக்கின்றார்.

எனினும் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்துகின்றோம். கோட்டாபய ஒரு இலங்கைப் பிரஜையல்ல. இலங்கையின் அரசியலமைப்பின் 31ம் பிரிவுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியானவர் இலங்கை பிரஜைகள் மாத்திரமேயாகும்.

கோட்டாபய அமெரிக்காவின் குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் குடியுரிமைச் சட்டத்திற்கு அமைய இலங்கையின் அவரது குடியுரிமை இல்லாமல் போய்விட்டது. அவர் இலங்கையில் அரச பதவியை வகிப்பதாயின் அவர் இலங்கையின் பிரஜையாக இருக்க வேண்டும். அவர் 2005ம் ஆண்டு அவரது சகோதரர் ஜனாதிபதி ஆனதன் பின்னர் இலங்கையின் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கு கடைபிடித்த நடைமுறைகள் மோசடியானவையாகும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“கோட்டாபயவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல. மக்கள் நீதிமன்றத்தில் அவரைத் தோற்கடிப்போம்” - ஐதேக | Tamil Leader | We Lead the Nation