Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கம்மன்பிலவின் தேசப்பற்று ஆடை கலைந்தது!

T

The Leader Desk

நவம்பர் 9, 2019 • 6:10 PM

கம்மன்பிலவின் தேசப்பற்று ஆடை கலைந்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், பெற்றோர்கள் மற்றும் தங்கை ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அனைத்துச் சொத்துக்களும் வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
  • தான் வெளிப்படுத்திய இந்த விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு இடத்திற்கும் தன்னோடு விவாதத்திற்கு வருமாறு லசித பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்தார்.
  • கொழும்பு பொது நூல் நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது லசித பெரேராவினால் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
எழுத்து அளவு:

மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், பெற்றோர்கள் மற்றும் தங்கை ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அனைத்துச் சொத்துக்களும் வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு பொது நூல் நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பின் போது லசித பெரேராவினால் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரயன் ஷெடிக்கின் சொத்துக்களை போலி அட்டோணி அனுமதிப்பத்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்காகவே லசித பெரேரா வெளிநாட்டுப் பிரஜையான பிரயன் ஷெடிக் என்ற முதலீட்டாளரின் அட்டோணி பொறுப்பாளர் என்ற வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை கூட்டியிருந்ததார்.

தான் வெளிப்படுத்திய இந்த விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு இடத்திற்கும் தன்னோடு விவாதத்திற்கு வருமாறு லசித பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்தார்.

உதய கம்மன்பில அரசியல் நோக்கங்களுக்காக போலியான கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும், அவர் ஒரு தேசப்பற்றாளராகக் காட்டுவது கவலைக்குரிய விடயம் என்றும் லசித பெரேரா இதன் போது கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கம்மன்பிலவின் தேசப்பற்று ஆடை கலைந்தது! | Tamil Leader | We Lead the Nation