Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வெற்றி பெற்றாலும் பயனில்லை! கோட்டாபய இன்னமும் அமெரிக்கரே...!

T

The Leader Desk

நவம்பர் 9, 2019 • 6:05 PM

வெற்றி பெற்றாலும் பயனில்லை! கோட்டாபய இன்னமும் அமெரிக்கரே...!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த வழக்கின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர்.
  • அத்துடன் இதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு எதிராக அஹிம்சா விக்ரமதுங்கவின் மனுவிற்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய கோட்டாபயவின் குடியுரிமை விவாதத்திற்குரியது என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகும்.
  • இதனடிப்படையில் கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையே என உறுதியானால் வரும் 16ம் திகதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றாலும் அதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.
எழுத்து அளவு:

செயற்பாடுகளை நீக்கிக் கொள்ளல் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இலங்கை மக்களை ஏமாற்றுவதை தடுத்து நிறுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரி அமெரிக்க நிவ் ஜர்சியில் வசிக்கும் இலங்கையரான அநுர ரூபசிங்க என்பவர் நிவ்யோர்க்கில் அமைந்துள்ள தென் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதியான கோட்டாபய, இராஜாங்கச் செயலாளா் மற்றம் இராஜாங்கத் திணைக்களம் இதவரையில் கோட்டாபயவின் குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும், அது இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.  முறைப்பாட்டாளரின் பிரதான வாதங்கள் சில உள்ளன.

அவற்றுள் பிரதானமானது, கோட்டாபயவின் பிரஜா உரிமையை விலக்கிக் கொள்வதற்காக விண்ணப்பிப்பது அமெரிக்கச் சட்டத்தின் கீழ் சுயமாக இடம்பெறும் ஒரு விடயமல்ல. அத்துடன் இதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு எதிராக அஹிம்சா விக்ரமதுங்கவின் மனுவிற்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய கோட்டாபயவின் குடியுரிமை விவாதத்திற்குரியது என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகும்.

இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் பெரும்பாலும் வழங்கப்படப் போவது கலிபொர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணையான தீர்ப்பாக இருக்கும். இதனடிப்படையில் கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையே என உறுதியானால் வரும் 16ம் திகதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றாலும் அதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.

காரணம் கண்டிப்பான அவரது நியமனத்திற்கு எதிராக தேர்தல் மனு தாக்கல் செய்து நீண்ட காலம் வழக்கு இழுபட்டுச் செல்லாமல் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதைப் போன்று கோட்டாபயவின் நியமனமும் இரத்தாகிவிடலாம்.

(லங்கா ஈ நிவ்ஸ்)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...