வழங்கிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குமாறு அரசியல் செயற்பாட்டாளரும், அரசியல் மற்றும் சமூக விமர்சகருமான விதர்ஷன கண்ணங்கர இடதுசாரி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “அனித்தா” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,
நாம் கடந்த காலங்களில் இடதுசாரி மாற்று சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம். 2015ம் ஆண்டு தேர்தலிலிருந்து நாம் இதனைக் கூறினோம். 2015ம் ஆண்டில் அனைவரும் அன்னத்தை அரவணைத்துக் கொண்ட போது நாம் இடதுசாரிகளிடத்தில் ஒன்றுபட்டோம்.
எனினும் இன்று இடம்பெறுவது அன்று தோற்றுப் போன ராஜபக்ஷக்கள் அன்றையதை விடவும் மூச்சு வாங்கிக் கொண்டு களமிறங்கியிருப்பதாகும். எவ்வாறாயினும் இம்முறை நிலைமையினை நாம் பார்ப்பது 2015ம் ஆண்டில் இருந்த நிலையை விட மோசமான வகையிலாகும்.
எமக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடு இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வந்தாலும் நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும் இப்போதிருக்கும் நடைமுறைத் தெரிவு அதுவாகும். அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டே நாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். இடதுசாரி கட்சிக்கு முதல் விருப்பு வாக்கினை வழங்கிவிட்டு இரண்டாவது வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் வழங்குங்கள் என கோருகின்றோம் என்றார்.
இடதுசாரிகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு
T
The Leader Desk
நவம்பர் 8, 2019 • 2:44 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வழங்கிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குமாறு அரசியல் செயற்பாட்டாளரும், அரசியல் மற்றும் சமூக விமர்சகருமான விதர்ஷன கண்ணங்கர இடதுசாரி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- எவ்வாறாயினும் இம்முறை நிலைமையினை நாம் பார்ப்பது 2015ம் ஆண்டில் இருந்த நிலையை விட மோசமான வகையிலாகும்.
- “அனித்தா” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

