Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

எரானின் முறைப்பாட்டால் “கொட்டோக்கள்” குழப்பத்தில்!

T

The Leader Desk

நவம்பர் 8, 2019 • 2:41 PM

எரானின் முறைப்பாட்டால் “கொட்டோக்கள்” குழப்பத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இம்முறைப்பாடானது பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் இது தொடா்பான அறிக்கையினை அரச புலனாய்வுச் சேவை, பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன நவம்பர் 06ம் திகதி பொலிஸ் மா அதிபருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
  • இத்தகவல்களின் உண்மை, பொய் தெரியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பில் எதிர்ப்பைத் தெரிவித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இணை ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெருமவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபயவுக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற இரணுவ புலனாய்வுப் பிரிவு அங்கத்தவர்களின் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரத்தினுள் சில அரசியல் குழுவினால் குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி கிடைத்த ட்வீட்டர் செய்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடானது பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் இது தொடா்பான அறிக்கையினை அரச புலனாய்வுச் சேவை, பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன நவம்பர் 06ம் திகதி பொலிஸ் மா அதிபருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். இத்தகவல்களின் உண்மை, பொய் தெரியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தான் உள்ளிட்ட மூவருக்கு இந்த தகவல்கள் ட்வீட்டர் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...