Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சந்திரிகாவின் பதவி நீக்கம் ஒத்திவைப்பு : ஸ்ரீ.ல.சு.கட்சி தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்!

T

The Leader Desk

நவம்பர் 6, 2019 • 6:07 PM

சந்திரிகாவின் பதவி நீக்கம் ஒத்திவைப்பு :  ஸ்ரீ.ல.சு.கட்சி தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மைத்திரிபால சிரிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் பிற்போடுவதற்கு நேற்று (5) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
  • இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் கலந்து கொண்டிருந்தார்.
  • கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாசாவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

மைத்திரிபால சிரிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் பிற்போடுவதற்கு நேற்று (5) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டாரங்களில் நேற்று (5) இடம்பெற்ற “நாம் ஸ்ரீலங்கா” மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பதில் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாசாவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த செயற்குழு கூட்டத்தின் போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவும் கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கட்சி ஆலோசகா் பதவியிலிருந்து நீக்குதல் மற்றும் அவரது கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவது தொடர்பில் பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில் மத்திய செயற்குழுவில் இது தொடர்பாக பேசப்பட்ட போதிலும் எந்தவித தீர்மானங்களும் இவ்விடயமாக மேற்கொள்ளப்படவில்லை

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...