Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

அநுரவுக்கு வாக்களிப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு : இரண்டாவது விருப்பு வாக்கை கோட்டாவுக்கு எதிராக வழங்குங்கள்!

T

The Leader Desk

நவம்பர் 5, 2019 • 5:35 PM

அநுரவுக்கு வாக்களிப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு : இரண்டாவது விருப்பு வாக்கை கோட்டாவுக்கு எதிராக வழங்குங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெற்றுவிடுவார் என்ற அச்சமிருந்தால் அநுர குமார திசாநாயக்காவுக்கு 1ம் இலக்கத்தை வழங்கி விட்டு இரண்டாவது விருப்பு வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வேறு யாருக்காவது வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னியின் அரசியல் பீட உறுப்பினர் லால் காந்த கூறினார்.
  • கடந்த 02ம் திகதி எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லால் காந்த இவ்வாறு கூறினார்.
  • வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டைப் பெற்று 12வது இடத்திலிருக்கும் எமது அநுர குமார திசாநாயக்காவின் சின்னத்திற்கு வாக்களிப்பதேயாகும்.
எழுத்து அளவு:

பெற்றுவிடுவார் என்ற அச்சமிருந்தால் அநுர குமார திசாநாயக்காவுக்கு 1ம் இலக்கத்தை வழங்கி விட்டு இரண்டாவது விருப்பு வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வேறு யாருக்காவது வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னியின் அரசியல் பீட உறுப்பினர் லால் காந்த கூறினார்.

கடந்த 02ம் திகதி எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லால் காந்த இவ்வாறு கூறினார்.  இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய லால் காந்த மேலும் கூறியதாவது,

“எம்மிடம் அதிகமான பேச்சுக்கள் இல்லை. நாம் செய்யப் போவது என்ன? வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டைப் பெற்று 12வது இடத்திலிருக்கும் எமது அநுர குமார திசாநாயக்காவின் சின்னத்திற்கு வாக்களிப்பதேயாகும்.

ஆனால் எமக்கு மூன்று விருப்பு வாக்குகள் இருக்கின்றன. அநுர குமார திசாநாயக்காவுக்கு வாக்களிப்பவர்கள் ஏனைய அனைத்தையும் புறந்தள்ளவிட்டு எமது சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட வேண்டியதுதான்.  ஆனால் நாம் சந்திக்கும் சிலர் உங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு வாக்களிக்கும் போது கோட்டா வென்று விடுவாறோ? எனக் கூறுகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றுதான். அநுர குமார திசாநாயக்காவுக்கு ஒன்றை வழங்கிவிட்டு ஏனைய இரண்டு விருப்புக்களையும் கோட்டாவுக்கு எதிராக வேறு யாருக்கு வழங்கினாலும் அது எமக்குப் பிரச்சினையில்லை. கோட்டாவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு இரண்டாம் விருப்பு வாக்கினை வழங்கலாம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...