Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பில் சஜித் மற்றும் கோட்டாபய ஆகியோரின் கொள்கைகள் இதோ!

T

The Leader Desk

நவம்பர் 4, 2019 • 5:49 PM

தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பில் சஜித் மற்றும் கோட்டாபய ஆகியோரின் கொள்கைகள் இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தமது கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானத்தைவெளியிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
  • என்பவற்றை ஆராய்ந்து பார்த்தோம்.
  • தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.
எழுத்து அளவு:

ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தமது கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானத்தைவெளியிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இது தொடா்பில் பீபீசி சிங்கள சேவைக்கு அக்கடசியின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் கருத்து தெரிவித்த போது, சஜித் பிரேமதாசாவுக்கு தாம் ஆதரவளிப்பதற்காக எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“நாம் இந்த இரண்டு வேட்பாளர்களின் வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தோம். ஜனநாயகத்திற்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்?, சட்டத்தின் ஆட்சிக்கு யார் மதிப்பளிக்கின்றார்கள்? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தோம். எனினும் எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ மற்றும் ப்ளொட் அமைப்பு ஆகியன இணைந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் செயற்படுகின்றார்.

இதே வேளை ப்ளொட் அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் பீபீசி சிங்கள சேவைக்குத் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...