சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் போது கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்குவது 1990ம் ஆண்டில் திருகோணமலை நகரில் தனியான ஈழ நாட்டைப் பிரகடணப் படுத்தி, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவும், ஒரே தடவையும் ஈழக் கொடியை பகிரங்கமாகவே ஏற்றிய வரதராஜா பெருமாள் போன்றோரே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தரை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய, இலங்கை தேசிய கொடியை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய ஒரு அரசியல்வாதி என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது,
“இது ஒன்றும் புதிய விடயமல்ல. தமழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் எம்மோடு இணைந்தே பணியாற்றுகின்றது. எம்மோடு பாரியளவிலானோர் தற்போது இணைந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது தெரண டீவியும் நிவ்ஸ் அலார்ட் ஒன்றை போட்டுள்ளதை நான் கண்டேன். இது நாம் நினைத்த விடயங்களேயாகும். அவர்கள் இப்போது டீஎன்ஏ கட்சியும் சஜித் பிரேமதாசாவுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளதாக கூறுகின்றனர். இனி அவர் இதோ புலிகளும் சஜித்துடன் சேர்ந்துவிட்டார்கள் எனக் கூறுவார்கள்” என்றார்.
இதுதான் வித்தியாசம் : தேசிய கொடியை ஏற்றிய சம்பந்தன் சஜித்துடன். ஈழக் கொடியை ஏற்றிய வரதராஜா கோட்டாவுடன் - மங்கள சமரவீர
T
The Leader Desk
நவம்பர் 4, 2019 • 5:45 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மாத்தரை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
- தற்போது தெரண டீவியும் நிவ்ஸ் அலார்ட் ஒன்றை போட்டுள்ளதை நான் கண்டேன்.
- அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது, “இது ஒன்றும் புதிய விடயமல்ல.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

