Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு. முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்!

T

The Leader Desk

நவம்பர் 4, 2019 • 5:35 PM

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க  சஜித்தே சரியான தெரிவு.  முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார்.
  • "கடந்த காலங்களில் நடந்ததுபோலன்றி அனைத்து இனத்தவர்களையும் சமமாக நடத்துவேன் எனவும் நிம்மதியுடன் வாழச்செய்வேன்" எனவும் சஜித் உறுதியளித்துள்ளார்.
  • இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,அமைச்சர் ஹக்கீம் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் டி எம் சுவாமிநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,மாந்தை கிழக்கு பிரதேசபை தவிசாளர் நந்தன் உட்பட பலர் உரையாற்றினார்.
எழுத்து அளவு:

 தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார்.

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இன்று காலை (04) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது,

சிறுபான்மை மக்களை "வந்தான் வரத்தான்" எனக்  கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம்புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். கடந்த ஒரு தசாப்தகாலமாக இனவாதிகள் சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்துகின்றனர். கொச்சைப்படுத்துகின்றனர். மதக்கடமைகளுக்கு தடைவிதிக்கின்றனர். மதத்தலங்களை உடைக்கின்றனர்.எங்களை தீவிரவாதிகளாகவும், இனவாதிகளாகவும் சித்தரித்து இந்த நாட்டில் பெரியபிரளயம் ஒன்றை கிளப்பிவருகின்றனர். சிறையில்வாடும் தமிழ் இளைஞசர்களை விடுவிக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தால்  அதனை இனவாதமாக பெரும்பான்மைச்சமூகத்தில் காட்டுகின்றனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத்தருமாறு கேட்டால் அதுவும் அவர்களால் இனவாதமாக பார்க்கப்படுகின்றது. நாங்கள் எவருக்கும் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழவேண்டிய அவசியம் கிடையாது.தன்மானத்துடனும் சுயகெளரவத்துடனும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு நாம்  உரித்துடையவர்கள். அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு  நல்ல ஒரு தலைவனாக  சஜித் பிரமேதாசவை இனம்கண்டுள்ளோம்.அவரை இந்த நாட்டுமக்கள் ஒரு தேசிய வரலாற்று நாயகனாக இப்போது பார்க்கின்றனர்.

"கடந்த காலங்களில் நடந்ததுபோலன்றி  அனைத்து இனத்தவர்களையும்  சமமாக நடத்துவேன் எனவும் நிம்மதியுடன் வாழச்செய்வேன்" எனவும் சஜித் உறுதியளித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. யுத்தத்தின் பிறகு முதன்முதலாக துணுக்காய், பாண்டியகுளத்திலேயே மீள்குடியேற்றத்தை பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்தோம். மக்களின் தேவைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் இன்னும் பூரணப்படுத்தப்  படாத நிலையில் அவற்றையும்  எதிர்காலத்தில் பூர்த்திசெய்யவேண்டி இருக்கின்றது. எனவே இனவாதிகளின் கைகளுக்குள் இந்த நாடு மீண்டும் சிக்கினால் நமது எதிர்பார்ப்புகள்  அனைத்துமே ஏமாற்றமாகி விடும் நேர்மையான தலைவரான சஜித்தை ஆதரித்து அவரை வெற்றிபெறசெய்வோம்..

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,அமைச்சர் ஹக்கீம் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் டி எம் சுவாமிநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,மாந்தை கிழக்கு பிரதேசபை தவிசாளர் நந்தன் உட்பட பலர் உரையாற்றினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...