பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி இலங்கை தமிழரசுக் கட்சியாகும்.
ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (030 வவுனியாவில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அக்கட்சியின் ஆலோசகரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மற்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூடியது. இதன் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசா முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடணத்தின் ஊடாக வடக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என கூட்டமைப்பின் தலைவர் ஆா். சம்பந்தன் சஜித் பிரேமதாசாவின் கொள்கை பிரகடணம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.
மாவை சேனாதிராஜா தலைமை வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் முன்னணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமை வகிக்கும் டெலோ அமைப்பு, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமை வகிக்கும் ப்ளொட் அமைப்பு மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் தலைமை வகிக்கும் ஈ.பி.எல்.ஆர்.எப் கட்சி போன்றன ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு!
T
The Leader Desk
நவம்பர் 3, 2019 • 5:32 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார்.
- ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (030 வவுனியாவில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அக்கட்சியின் ஆலோசகரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.
- சம்பந்தன் மற்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூடியது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

