அநுர குமார திசாயநாயக்கா தெரிவித்துள்ளார். அம்பாறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அநுர குமார திசாநாயக்கா மேலும் கூறியதாவது,
“தற்போது தேர்தல் ஒன்று வந்திருக்கின்றது. எனினும் இம்முறை இது ஒரு தேர்தல் காலமாகத் தெரியவில்லை. நத்தால் காலத்தைப் போன்றிருக்கின்றது. ஒருவர் கூறுகின்றார், நான் வெற்றி பெற்றால் வேளான்மைச் செய்கைக்கு இலவசமாக உரம் தருவேன் என்று. இன்னொருவர் தான் வெற்றி பெற்றால் அனைத்து பயிர்ச் செய்கைக்கும் இலவசமாக உரம் தருவேன் என்கிறார்.
பிள்ளைகள் இருக்கும் இடத்தில் என்றால், நான் வெற்றி பெற்றால் ஒரு கப் பால் தருவேன் எனக் கூறுகின்றனர். பட்டதாரிகள் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் அரச தொழில் வழங்குவதாகக் கூறுகின்றனர். கர்ப்பிணித் தாய்மார் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் போஷாக்கு பொதி வழங்குவேன் என்கிறார்கள். நத்தால் தாத்தாக்கள் இருவர் வந்தததை்ப் போன்று.
நான் அனைவருக்கும் இலவசமான அரிசி வழங்குவேன் என அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கூறியபோது, எங்கிருந்து அந்தளவு அரிசியைக் கொண்டு வருவீர்கள் என யாரோ ஒருவர் திரும்ப கேட்டிருக்கின்றார். அப்போது அவர் கூறியிருக்கின்றார், நான் சந்திரனிலிருந்தாவது அரிசியைக் கொண்டு வந்து தருவேன் எனக் கூறியிருக்கின்றார். அதற்கும் மக்கள் கைதட்டியிருக்கின்றார்கள்” என்றார்.
வறுமையினை விற்பனை செய்யும் அரசாங்கத்திற்கு பதிலாக வறுமையினை ஒழிக்கும் அரசாங்கத்தை அமைப்போம் - அநுர குமார
T
The Leader Desk
நவம்பர் 1, 2019 • 4:36 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அநுர குமார திசாயநாயக்கா தெரிவித்துள்ளார்.
- பிள்ளைகள் இருக்கும் இடத்தில் என்றால், நான் வெற்றி பெற்றால் ஒரு கப் பால் தருவேன் எனக் கூறுகின்றனர்.
- அம்பாறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

