Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் பிரதான கட்சிகளுடன் இணையும் நாள்? - ரணில் கூறுகின்றார்

T

The Leader Desk

அக்டோபர் 31, 2019 • 5:48 PM

தமிழ் அரசியல்வாதிகள் பிரதான கட்சிகளுடன் இணையும் நாள்? - ரணில் கூறுகின்றார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
  • கூட்டணி இதனை எதிர்த்ததால் அன்று இதனைச் செய்ய முடியாது போனது.
  • ஜனாதிபதி தேர்தலில் பின்னர் பாராளுமன்றத்தில் 125 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இரந்தால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எழுத்து அளவு:

தமிழ் அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரத்மலானை சில்வாஸ் மண்டபத்தில் இடம்பெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பின் போது தேசிய பிரச்சினை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது,“அரசியலமைப்பு தொடர்பில் அனேக யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் நாம் அனேக பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம். கூட்டணி இதனை எதிர்த்ததால் அன்று இதனைச் செய்ய முடியாது போனது.

ஜனாதிபதி தேர்தலில் பின்னர் பாராளுமன்றத்தில் 125 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இரந்தால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும். அப்போது குறித்த திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும்.

தமிழ் கட்சிகள் ஏற்றுக் கொள்வது ஒற்றையாட்சியினுள் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டு அதிகாரத்தைப் பகிர்வதேயாகும். தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தாருங்கள், அப்போது தமது கட்சிகள் தேவையில்லை என்றும், அக்கட்சிகளைக் கலைத்துவிட்டு பிரதான கட்சிகளோடு இணைந்து கொள்வதாகவும் அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...