Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2019 • 5:43 PM

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியீடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
  • அது எப்போது நனவாகும் என்ற எண்ணமே மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ளது.
  • மக்களுக்கு புதிய ஒளியை ஏற்படுத்திக்கொடுக்கவும் மக்களுக்கான நல்வாழ்வை உருவாக்கும் வகையில் எதிர்வரும் 16ஆம் திகதி உருவாகும் புதிய யுகத்தில் ஜனநாயக ரீதியில் புதிய பயணமாக இது அமையும் எனலாம். எமது தாய்நாடு, எந்த வகையிலும் ஏனைய நாடுகளின் முன்னிலையிலும் அடிபணியாத நாடாகும்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று கண்டியில் வெளியிடப்பட்ட வேளையில் அந் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்களை பகிர்ந்து  மூவினமக்களையும்  நாட்டினையும்  நாம் காப்பாற்றுவதுடன்  மக்கள் சுதந்திரம் என்பதை வெறுமனே அரசியல் அமைப்பில் எழுத்தில் மாத்திரம் உள்ளடக்காது  அது நடைமுறையாகும் வகையில் எமது ஆட்சியை  நடத்துவோம் 

புரட்சிகர சமூக அரசியல் பொருளாதார மாற்றம் ஒன்றினை உருவாக்ககும் ஆரம்பமே இதுவாக்கும். இந்த நாட்டில் சகல இன மத மக்களின் எதிர்பார்ப்புமே பொருளாதார பலமும் அரசியல் இஸ்திரமும் கொண்ட பலமான இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அது எப்போது நனவாகும் என்ற எண்ணமே மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ளது. மக்களுக்கு புதிய ஒளியை ஏற்படுத்திக்கொடுக்கவும் மக்களுக்கான நல்வாழ்வை உருவாக்கும் வகையில் எதிர்வரும் 16ஆம்  திகதி உருவாகும் புதிய யுகத்தில் ஜனநாயக ரீதியில் புதிய பயணமாக இது அமையும் எனலாம். 

எமது தாய்நாடு, எந்த வகையிலும் ஏனைய நாடுகளின் முன்னிலையிலும் அடிபணியாத நாடாகும். எனினும் ஏனைய சர்வதேச நாடுகளில்  தனிப்பட்ட கொள்கைக்குள் எம்மை அடக்க முயற்சிக்கும் கால சூல்நிலையில் எமது நாட்டின் அரசியல் சுதந்திரம், சகல மதங்கள், இனங்களை பாதுகாத்து பலமான ஐக்கிய நாட்டினை நாம் உருவாக்குவோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...