Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

குண்டு தாக்குதல் காயம் எங்கே? - கோட்டாபயவுக்கு படை வீரரின் சவால்!

T

The Leader Desk

அக்டோபர் 29, 2019 • 5:57 PM

குண்டு தாக்குதல் காயம் எங்கே? - கோட்டாபயவுக்கு படை வீரரின் சவால்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த இரத்தம் அவருடையதாயின் அதற்குரிய காயத்தைக் காட்டுமாறு ஓய்வு பெற்ற இராணுவ படைவீரர் ஒருவர் கோட்டாபயவுக்கு சவால் விடுத்துள்ளார்.
  • அவ்வாறு செய்திருந்தால் 2009ம் ஆண்டில் படைவீரர்கள் மாகாண சபைக்கு வந்த போது மாகாண சபை மேடையில் நான் பிரதான பேச்சாளர்.
  • நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.
  • எனது நெஞ்சில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அந்த இரத்தம் அவருடையதாயின் அதற்குரிய காயத்தைக் காட்டுமாறு ஓய்வு பெற்ற இராணுவ படைவீரர் ஒருவர் கோட்டாபயவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடும் போது,

“பொதுஜன பெரமுணவுக்கோ, மொட்டு கட்சியில் இருக்கும் எவருக்குமோ, ராஜபக்ஷக்களுக்கோ நாம் பயப்படப் போவதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுர தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள படை வீரர்களை விடுதலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். அவரது கொள்கைப் பிரகடணத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லை.

நான் படையினரின் போராட்டம் மற்றும் அரசியல் இரண்டையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நான் இராணுவ பேராட்டத்தினால் பிரபலமடையவில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணியில் அன்று நாம் ஒன்றிணைந்து பணியாற்றியிருந்தாலும், வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தாலும் மற்றவர்களைப் போன்று நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் 2009ம் ஆண்டில் படைவீரர்கள் மாகாண சபைக்கு வந்த போது மாகாண சபை மேடையில் நான் பிரதான பேச்சாளர். மாகாண சபை அல்லது இப்போது நான் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன். நான் வேட்பு மனுவை பிச்சை எடுக்கவில்லை.

அதே போன்றுதான் எம்மால் இருக்க முடியாத சந்தர்ப்பங்கள் இருந்தது. 2000ம் ஆண்டில் ஆணையிறவில் நாம் ஆயிரக்கணக்கான படையினர் தனிமைப்பட்டுப் போயிருந்தோம். அப்போது கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை. ஜெனரல் ஜானக பெரேரா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதான் எம்மை மீட்டெடுத்தார்கள். இரண்டு கப்பல்கள் வந்துள்ளது, காங்கேசன்துறைக்குச் செல்ல ஆயத்தமாகுமாறு சொன்னார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினை மீட்டெடுத்த போது கோட்டாபய இருக்கவில்லை.

இப்போது நான் எனது ஆடையைக் கழட்டிக் காட்டுகிறேன். எனது நெஞ்சில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளது. முடிந்தால் கோட்டாபயவின் உடம்பில் ஒரு காயத்தைக் காட்டுமாறு அவருக்கு சவால் விடுகின்றேன் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...