Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சஜித்திற்கு வாக்களித்து ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்போம்

T

The Leader Desk

அக்டோபர் 28, 2019 • 6:31 PM

சஜித்திற்கு வாக்களித்து ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்போம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும் எம்முடன் அனைத்து இனமதங்களைச் சார்ந்தோரும், நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களைச் சார்ந்தோரும் கைகோர்த்திருக்கின்றனர் என்றும் அவர் இதன்போது கூறினார்.
எழுத்து அளவு:

குடும்ப ஆட்சிக்காரர்களிடம் நாட்டைக் கையளிப்பதா அல்லது ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவோரிடம் நாட்டைக் கையளிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த  தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன், ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறும் வலியுறுத்தினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச்செய்யும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு இன்று புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபுறம் பாஸிசவாதமும், மறுபுறம் ஜனநாயகமும் போட்டியிடுகின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் நிச்சயமாக சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.  அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. 

மக்களை முன்நிறுத்திய ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதற்கான ஒரே தெரிவு சஜித் பிரேமதாசவே ஆவார்.  கோத்தபாய ராஜபக்ஷவின் மேடையில் அவருடைய குடும்பம் மாத்திரமே நிற்கின்றது. எனினும் எம்முடன் அனைத்து இனமதங்களைச் சார்ந்தோரும்,  நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களைச் சார்ந்தோரும் கைகோர்த்திருக்கின்றனர் என்றும் அவர் இதன்போது கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்திற்கு வாக்களித்து ஜனநாயக ஆட்சியின் இரண்டாவது பயணத்தை நீட்டிப்போம் | Tamil Leader | We Lead the Nation