Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“பிசாசு கதவுக்கு அருகில்!, வீணை வாசிப்பதில் பயனில்லை” - கலாநிதி ஜயம்பதி

T

The Leader Desk

அக்டோபர் 27, 2019 • 5:21 PM

“பிசாசு கதவுக்கு அருகில்!, வீணை வாசிப்பதில் பயனில்லை” - கலாநிதி ஜயம்பதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
  • நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • எனவே இனிமேலும் பிசாசு கதவுக்கு அருகில் இருக்கும் போது வீணை வாசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.
எழுத்து அளவு:

வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.  நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வரவிருக்கும் எதிரி மிகவும் ஆபத்தானவர். ஒரு வருடத்திற்கு முன்னர் வியத்மக சம்மேளனத்தில் வைத்து கமல் குணரத்ன என்ன கூறினார்?,  அரசியலமைப்பு மாற்றத்திற்காகச் செயற்படுபவர்கள் மாத்திரமல்ல, அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைப்பை வழங்குபவர்களையும் கூட கொலை செய்து, அந்த 87, 89, 90ம் ஆண்டுகளைப் போன்று அவர்களை உடல்களை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாதவாறு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அரசியல் அமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருபவர்கள் தேசத் துரோகிகள், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என கடற்படையில் உயர் பதவி வகித்த சரத் வீரசேகர கூறியிருந்தார்.  இவ்வாறான பாதாள உலகத்தினர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீதிமன்றத்திற்கு என்ன நடக்கும் என்பதை புதிதாகக் கூறத் தேவையில்லை. அவற்றை நாம் அறிவோம்.  எனவே இனிமேலும் பிசாசு கதவுக்கு அருகில் இருக்கும் போது வீணை வாசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

அதனை விட முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. நியாயமான காரணங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ரத்துபஸ்வலவில், சிலாபத்தில் போன்ற இடங்களில் என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம். அவைகள்தான் இனி எதிர்காலம். இவை செயலாளர் பதவியில் இருக்கும் போது நடந்தவை. ஜனாதிபதி பதவி கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, 2015ம் ஆண்டில் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களைப் பாதுகாக்க, நீதிமன்ற சுயாதீனத்தைப் பாதுகாத்துக் கொள்ள, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள, பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பலமிக்க நிறுவனமாக முன்னெடுத்துச் செல்ல நாம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“பிசாசு கதவுக்கு அருகில்!, வீணை வாசிப்பதில் பயனில்லை” - கலாநிதி ஜயம்பதி | Tamil Leader | We Lead the Nation