Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பெரும் அரக்கனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சஜித்திற்கு வாக்களிப்போம்! - முன்னணி பாடகர் சுனில் பெரேரா

T

The Leader Desk

அக்டோபர் 27, 2019 • 5:19 PM

பெரும் அரக்கனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சஜித்திற்கு வாக்களிப்போம்! - முன்னணி பாடகர் சுனில் பெரேரா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர்கள் ஒருவராலும் வெற்றி பெற முடியாத காரணத்தினால், கோட்டாபய என்ற அதி பயங்கரமான பெரும் அரக்கனைத் தோற்கடிப்பதற்காக சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு முன்னணி பாடகர் சுனில் பெரேரதா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • “நாய் குட்டி ஒன்றைக் கொண்டு வரும் விமானம் சென்று விட்டதா?” என சாதாரணமாக ஊடகவியலாளர்கள் கேட்டதைப் போன்று கேட்டார்.
  • ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இக்கோரிக்கையை விடுத்த அவர், அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் மேலும் கூறியதாவது, “நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.
எழுத்து அளவு:

அவர்கள் ஒருவராலும் வெற்றி பெற முடியாத காரணத்தினால், கோட்டாபய என்ற அதி பயங்கரமான பெரும் அரக்கனைத் தோற்கடிப்பதற்காக சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு முன்னணி பாடகர் சுனில் பெரேரதா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இக்கோரிக்கையை விடுத்த அவர், அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் மேலும் கூறியதாவது,

“நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.  மகேஸ் சேனநாயக்காவுக்கு, அநுர குமாரவுக்கு, பல்லேவத்தைக்கு என்று எவராலும் வெற்றி பெற முடியாது.

எனவே நாம் செய்ய வேண்டியது இருக்கும் அரக்கனை விரட்டுவதாகும்.  தற்போது எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கும் வாக்கை அளிப்பதில் எந்தப் பயனுமில்லை. இவர்கள் யாராலும் வெற்றி பெற முடியாது என்பதாலும், இருக்கும் பயத்தினாலும் நான் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன்.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோரிகை கூடாத வார்த்தைகளால் கோட்டாபய திட்டினார். தற்போது அந்தச் சகோதரி இலங்கையில் இல்லை. அவர் கேட்டது ஒன்றும் தப்பான ஒன்றல்ல. “நாய் குட்டி ஒன்றைக் கொண்டு வரும் விமானம் சென்று விட்டதா?” என சாதாரணமாக ஊடகவியலாளர்கள் கேட்டதைப் போன்று கேட்டார்.  அப்போது மிகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அச்சகோதரியைத் திட்டினார். “நாய் குட்டியை அல்ல, தேவையாயின் யானையினையும் விமானத்தில் கொண்டு வர என்னால் முடியும். இதில் உனக்கு இருக்கும் வருத்தம் என்ன” எனக் கேட்டார். இவ்வாறு சூடாகும் தலைவர் நல்லவராக இருக்க முடியாது.

அச்சகோதரி லசந்த விக்ரமதுங்கவிடம் பணியாற்றியவர். லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அவர் பயந்து போனார். இப்போது அந்தக் குடும்பம் அமெரிக்காவில் வசிக்கின்து. அச்சகோதரியின் பெயர் பெட்ரிகா ஜான்ஸ்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...