கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நகரில் இடம்பெற்ற (26) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிவித்திகல பிரதேச சபை உறுப்பினர் திலிப் ராஜபக்ஷ, கஹவத்தை பிரதேச சபை வேட்பாளர் திருமதி வீரகோன், ஸ்ரீ.ல.சு.கட்சியின் இரத்தினபுரி மாவட்ட ஊடக இணைப்புச் செயலளார் தனூஜ் கமகே உள்ளிட்ட ஏராளமான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைவழங்குவதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,“சஜித் வந்தாலும், கோட்டா வந்தாலும் தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என வெளிநாடு ஒன்று தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றது. அவ்வாறு குற்றம் சுமத்தும் நாட்டின் குடியுரிமை உள்ளவரிடத்தில் அந்த அழுத்தத்தைத் தெரிவிக்க முடியும். தாய் நாட்டின் சுத்தமான குடியுரிமையைக் கொண்டுள்ள இலங்கையரான என்னிடம் அவ்வாறான அழுத்தங்களைச் செய்வதற்கு அவர்களால் முடியாது. இரு பக்கத்திலும் கால்களை வைத்துக் கொண்டிருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை எனக்கில்லை.
குழந்தை சுஜிர்த் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போமாக!
T
The Leader Desk
அக்டோபர் 27, 2019 • 5:17 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
- இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நகரில் இடம்பெற்ற (26) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
- தாய் நாட்டின் சுத்தமான குடியுரிமையைக் கொண்டுள்ள இலங்கையரான என்னிடம் அவ்வாறான அழுத்தங்களைச் செய்வதற்கு அவர்களால் முடியாது.
எழுத்து அளவு:
எனது எதிர்த்தரப்பு வேட்பாளர் இந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைக் கொண்டவரா என்ற பிரச்சினை உள்ளது. அவர் இரு பக்கத்திலும் இரு கால்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு அமெரிக்காவிலும் அடுத்த கால் இலங்கையிலும். ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில் இராணுவத்தினைக் காட்டிக் கொடுத்து விட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றார்” என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

