அறிந்து கொண்டிருந்ததாக சமாதானம் மற்றும் சமூக மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் உச்சநீதிமன்ற சட்டத்தரணி பங்குத்தந்தை அசோக் ஸ்டீபன் கூறினார்.
“சுருங்கக் கூறினால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடக்கவிருப்பதை அறிந்திருந்தார். இப்போது இவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு எமது கத்தோலிக சபையின் வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக எமது கார்டினலிடம் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கூறியிருக்கின்றார். அது நல்லதொரு விடயம்.
அப்படியாயின் அவர்களது அரசாங்க காலத்தில் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபத்தில் ஆர்ப்பாட்டம் செய்த எமது எண்டன் பெர்னாண்டோ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார், கட்டுநாயக்காவில் ரொஷேன் சானக படுகொலை செய்யப்பட்டார், ரத்துபஸ்வெலவில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். எனவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து கொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நியாயத்தை வழங்குங்கள் என கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூற வேண்டும்.
இவர்கள் அனைவரும் ஒன்றே! இவர்கள் இந்த தற்கொலை குண்டு தாக்குதலை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எனவே இந்த தாக்குலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பவர்களுக்கு பங்கு தந்தையின் சூடான பதில்!
T
The Leader Desk
அக்டோபர் 26, 2019 • 6:19 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அறிந்து கொண்டிருந்ததாக சமாதானம் மற்றும் சமூக மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் உச்சநீதிமன்ற சட்டத்தரணி பங்குத்தந்தை அசோக் ஸ்டீபன் கூறினார்.
- இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக எமது கார்டினலிடம் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கூறியிருக்கின்றார்.
- “சுருங்கக் கூறினால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடக்கவிருப்பதை அறிந்திருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

