Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் மொட்டு வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும்” - குமார வெல்கம

T

The Leader Desk

அக்டோபர் 26, 2019 • 6:16 PM

“ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் மொட்டு வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும்” - குமார வெல்கம

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ.ல.சு.கட்சி உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாறு குமார வெல்கம வலியுறத்தியுள்ளார்.
  • நேற்று (25) கொழும்பு கிரேண்ட ஒரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • இனி நான் பின்வாங்க மாட்டேன்.
எழுத்து அளவு:

நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என ஸ்ரீ.ல.சு.கட்சி உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாறு குமார வெல்கம வலியுறத்தியுள்ளார்.

நேற்று (25) கொழும்பு கிரேண்ட ஒரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் முழு நாட்டையும் பிரதிநித்துவப் படுத்தி ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஒன்று கூடலில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பின்னர் அதுவும் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.

இங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய குமார வெல்கம மேலும் கூறுகையில்,

“இந்த கூட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு கூட்டமாகும். இந்த வெற்றிகரமான கூட்டத்தை முன்னே கொண்டு செல்ல வேண்டும். அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் இதற்கு குமார வெல்கம தலைமைத்துவத்தை வழங்குவேன். இனி நான் பின்வாங்க மாட்டேன்.

அத்தாவுட செனவிரத்ன கூறியதைப் போன்று நாம் முன்னேறி செல்ல வேண்டுமாயின் இந்த தேர்தலில் மொட்டு கட்சியைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமக்கு வேறு மாற்று வழிகள் இல்லை. மாற்று வழிகள் இருக்கின்றது என நினைக்க வேண்டாம். நான் ஒரு போதும் மொட்டுவுக்கு வாக்களிக்க மாட்டேன். ஆனால் எனது வாக்கை நான் ஒருவருக்கு அளிப்பேன். அது யாருக்கு என யாரும் என்னிடம் கேட்க வேண்டாம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...