Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஆணையிறவிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபயவுக்கு விவாதத்திலிருந்து தப்பிச் செல்வது ஆச்சரியமானதல்ல! - மங்கள்

T

The Leader Desk

அக்டோபர் 25, 2019 • 4:41 AM

ஆணையிறவிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபயவுக்கு விவாதத்திலிருந்து தப்பிச் செல்வது ஆச்சரியமானதல்ல! - மங்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடுக்கப்பட்ட சவாலை நிராகரித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தப்பிச் செல்வது ஆச்சரியமான விடயமல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
  • அவரது அந்த ட்வீட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவாது, “அன்று பிரபாகரன் அனைத்து யுத்தங்களினதும் தாய் எனக் கருதிய ஆணையிறவு சண்டை ஆரம்பித்து ஒரு வாரத்தினுள் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய, சஜித்தின் விவாத அழைப்பை தவிர்த்து தப்பிச் செல்வது ஆச்சரியமான ஒன்றல்ல.
  • தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

விடுக்கப்பட்ட சவாலை நிராகரித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தப்பிச் செல்வது ஆச்சரியமான விடயமல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அந்த ட்வீட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவாது,

“அன்று பிரபாகரன் அனைத்து யுத்தங்களினதும் தாய் எனக் கருதிய ஆணையிறவு சண்டை ஆரம்பித்து ஒரு வாரத்தினுள் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய, சஜித்தின் விவாத அழைப்பை தவிர்த்து தப்பிச் செல்வது ஆச்சரியமான ஒன்றல்ல. காரணம் அவர் அன்றும் இன்றும் பயத்தினால் தப்பி ஓடுவதேயாகும்”

சஜித்தின் சவால்!

தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டு பின்வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்,

“எமது கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் நேருக்கு நேர் மோதும் தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். பலமிக்க வேட்பாளராயின் எதிர்த்தரப்பினருடன் ஒரே மேடையில்  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எவ்வித அச்சமும் இருக்கக் கூடாது”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...