ஆபத்தைக் கருத்திற் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு அதிகூடிய வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு தமது கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தேசிய அமைப்பாளர் பதவியை வகிக்கும் ஐக்கிய இடதுசாரி முன்னணி இதற்கு முன்னர் தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு கூடிய வாய்ப்புள்ள வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் நேற்று முன்தினம் (23) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.
“இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும், அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுப்பது”
கோட்டாபய ஆபத்தானவர் என்பதை விளங்கிக் கொண்டனர் : ஜயம்பதி சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம்!
T
The Leader Desk
அக்டோபர் 25, 2019 • 4:37 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எவ்வாறாயினும் நேற்று முன்தினம் (23) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

