Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானமைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே காரணம்

T

The Leader Desk

அக்டோபர் 24, 2019 • 5:58 PM

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானமைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே காரணம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். என்னுடைய தந்தையார் கடந்த 2011 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
  • தனது 19 ஆவது வயதில் அரசியலில் பிரவேசித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
  • அதனால் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒருநாளில் நிகழ்வொன்றில் ஆற்றிய தனது உரையில் இதுகுறித்து எனது தந்தை குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

என்னுடைய தந்தையார் கடந்த 2011 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். தனது 19 ஆவது வயதில் அரசியலில் பிரவேசித்த அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். சந்திரிகா குமாரதுங்கவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய அதேவேளை, பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்காக தனது அரசியல் பயணத்தை முழுமையாக அர்ப்பணிப்புச் செய்திருந்தார் என்பது சுதந்திரக் கட்சியில் அனைவரும் அறிந்த விடயமாகும். 

2010 ஆம் ஆண்டில் எமது கொலன்னாவ பிரதேச ஆசனத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ துமிந்த சில்வாவை நியமித்தார். அப்போது எனது தந்தை சற்று வருத்தமடைந்த போதிலும், இனிவரும் காலத்தில் இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டுமெனத் தீர்மானித்து துமிந்த சில்வாவிற்கு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறினார். 

எனினும் அதனைத் தொடர்ந்து கொலன்னாவ பிரதேசத்தில் வாழும் பலர் தமது பிள்ளைகள் முன்னரைப் போன்று அன்றி அவர்களுடைய நடவடிக்கைகளில் வித்தியாசமிருப்பதாகவும், பிள்ளைகள் பெற்றோருடன் சச்சரவில் ஈடுபடுவதாகவும் எனது தந்தையாரிடம் கூறினார்கள். 

அதனைத் தொடர்ந்து முன்னர் எப்போதும் இல்லாதவகையில் 500 இற்கும் மேற்பட்ட போதைப்பொருள் விற்குமிடங்களை எனது தந்தையார் கண்டறிந்தார். 

எனவே அவர் மிகுந்த கோபமடைந்து, இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துமாறு எனது தந்தை துமிந்த சில்வாவை எச்சரித்தார். எனினும் அவர் நிறுத்தவில்லை. அதனால் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒருநாளில் நிகழ்வொன்றில் ஆற்றிய தனது உரையில் இதுகுறித்து எனது தந்தை குறிப்பிட்டார். அதனையடுத்து இரு தினங்களின் பின்னர் 'பாரதலக்ஷ்மன் அதிகம் பேசுவதாகவும், அவருடைய கருத்துக்களால் தனக்கும் துமிந்த சில்வாவிற்கும் கரும்புள்ளி ஏற்படுவதாகவும் எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றும் கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார். 

அதன்பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதி எனது தந்தை படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மஹிந்த, கோத்தபாய கலந்துரையாடிய இடத்திலிருந்த மேர்வின் சில்வா சி.ஐ.டி அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானமைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே காரணம் என்று பலர் கூறியதுண்டு. அது நிதர்சனமான உண்மை. மஹிந்தவிற்காக எனது தந்தை எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்பதை நான் அவதானித்திருக்கிறேன். 

எனது தந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...