Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கையில்...!

T

The Leader Desk

அக்டோபர் 23, 2019 • 5:51 PM

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கையில்...!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • இவர்களின் மூலமாக தெரிவுக்குழு அறிக்கை தெளிவுபடுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று தேவாலயங்கள், மற்றும் மூன்று ஹோட்டல்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆகக்குறைந்தது 277 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • இதில் 40 வெளிநாட்டவர்கள், 45 குழந்தைகள் உள்ளடக்கப்பட்ட எண்ணிக்கையாகும்.
  • அத்துடன் 400க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

காலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலை தடுக்காது போனமைக்கு  அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளினுள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் இராணுவப் புலனாய்வு பணிப்பகத்தினர் ஆகியோர் தமது பொறுப்புகளை தவற விட்டுள்ளனர். 

மேலும் இந்த ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் நாட்டில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குவதற்கான தன்னல அக்கறைகளை கொண்டவர்கள்  புலனாய்வு தகவல்கள் தொடர்பாக செயற்படவில்லையா என்பது புரிந்து கொள்வதற்காக மேலும் விசாரணைகள் தேவைப்படும். 

அப்போது அத்தகைய ஒரு நிலைமை இத்தகைய பயங்கரவாத செயல்களை கட்டுப்படுதத்துவதற்கான  ஒரு பலமான ஆட்சி மாற்ற கோரிக்கைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் தெரிவுக்குழு அந்த அறிக்கையில் அவதானப்படுத்தியுள்ளது. 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை இன்று  பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலை அடுத்து அதனை கண்டறிய நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கடந்த ஆறு மாதங்களாக தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் இன்று புதன்கிழமை தமது விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பித்தனர். தெரிவுக்குழுவின் பிரதித் தலைவர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவுக்குழு அறிக்கையை சபைப்படுதினார், 

இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. 

இதில் தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், ரவூப் ஹகீம், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் மூலமாக தெரிவுக்குழு அறிக்கை தெளிவுபடுத்தப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று தேவாலயங்கள், மற்றும் மூன்று ஹோட்டல்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆகக்குறைந்தது 277 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 40 வெளிநாட்டவர்கள், 45 குழந்தைகள் உள்ளடக்கப்பட்ட எண்ணிக்கையாகும். அத்துடன்  400க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...