மக்களை தேவையற்ற வகையில் அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (22) மாலை அவர் விடுத்த விஷேட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டினுள் எவ்வகையிலான அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோன்றியிருக்கவில்லை என பாதுகாப்பு தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தரை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரசாரம் தொடர்பில் தெளிவு படுத்தி ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவினால் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அரச நிறுவனங்கள் மற்றும் தேசிய முக்கியத்துமுள்ள இடங்களில் தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துவது தொடர்பில் என்னால் 2019.04.23ம் திகதி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதோடு, அதன் பின்னர் அவ்வப்போது அந்த அரச நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சாதாரண நினைவூட்டல் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கடிதங்கள் மற்றும் சுற்றுநிருபங்களைத் தற்போது அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக விளக்கப்படுத்தியும், முறையற்ற வகையில் பயன்படுத்தியும் சில அரச நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் மக்களை தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக்கும் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
தற்போது நாட்டினுள் எந்த வகையிலுமான அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தலும் காணப்படவில்லை என பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத்தரையில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை : “சிலர் தேவையற்ற அச்சத்தை உண்டுபண்ண முயல்கின்றனர்” - ஜனாதிபதி செயலாளர்
T
The Leader Desk
அக்டோபர் 23, 2019 • 5:45 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மக்களை தேவையற்ற வகையில் அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
- நேற்று (22) மாலை அவர் விடுத்த விஷேட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
- மாத்தரை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரசாரம் தொடர்பில் தெளிவு படுத்தி ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

