Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டாவை வெல்ல வைப்பதற்காக பயங்கரவாத அச்சத்தை உண்டு பண்ணும் செயல்

T

The Leader Desk

அக்டோபர் 22, 2019 • 5:45 PM

கோட்டாவை வெல்ல வைப்பதற்காக பயங்கரவாத அச்சத்தை உண்டு பண்ணும் செயல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மையப்படுத்தி புதுவிதமான தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • இந்தச் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்கும் அதிபர்கள் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் செயற்பாடு மொட்டு கட்சியின் மாத்தரை மாவட்ட குழுவினரின் தலைமையில் மாத்தரை முன்னணி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
  • பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான பாடசாலை அதிபர்களினால் இந்த தேர்தல் செயற்பாடுகள் தமது பாடசாலைகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

மையப்படுத்தி புதுவிதமான தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான பாடசாலை அதிபர்களினால் இந்த தேர்தல் செயற்பாடுகள் தமது பாடசாலைகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  பயங்காரவாதிகளின் அச்சம் பெற்றோர்கள், மாணவர்களிடத்தில் ஏற்படும் வகையில் காலையில் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளின் புத்தகப் பைகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்துதல், பாடசாலை வாசல்களில் பெற்றோர்களை நிற்கச் செய்தல் மற்றும் பயங்கரவாதிகளின் அச்சம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக பெற்றோர்களுக்கு போலியான தகவல்களை வழங்குவது போன்றன இந்த புதுமையான தேர்தல் பிரசார தந்திரங்களாகும்.

இந்தச் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்கும் அதிபர்கள் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் செயற்பாடு மொட்டு கட்சியின் மாத்தரை மாவட்ட குழுவினரின் தலைமையில் மாத்தரை முன்னணி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் ஒக்டோபர் 20ம் திகதி முதல் நவம்பர் 12ம் திகதி வரையில் மாத்தரை மாவட்ட பாடசாலைகளில் வாசல்களில் மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதனையிடுதல் மற்றும் வாசல்களில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவான பெற்றோர்களை நிறுத்துதல் போன்றன நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் வதந்திகளைப் பரப்புவதற்கும்,  பொது இடங்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் பொதிகளை வைப்பதற்கும் மற்றொரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...