Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சந்திரிக்காவுடன் இணைந்து கொள்வோம்! - முன்னிலை வகிப்பதற்கு தயார்” - வெல்கம

T

The Leader Desk

அக்டோபர் 22, 2019 • 5:42 PM

சந்திரிக்காவுடன் இணைந்து கொள்வோம்! - முன்னிலை வகிப்பதற்கு தயார்” - வெல்கம

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தெரிவித்தார்.
  • எனவே அவரது தலைமைத்துவத்தில், அவரது வழிகாட்டலின் கீழ் எமது கட்சியைப் பாதுகாக்க முடியும்.
  • ஊடகங்களுக்கு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“ஸ்ரீ.ல.சு.கட்சி மீது பற்றுள்ள, ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க முன்வரும் அனைத்து ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்களை நாம் ஓரிடத்திற்கு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்த பின்னர் எம்மால் கட்சியைப் பாதுகாக்க முடியும்.

அடுத்தது, கட்சியைப் பாதுகாப்பது என்பது இந்நேரத்தில் இலகுவான ஒரு விடயமல்ல. ஆனால் எம்மால் அதனைச் செய்ய முடியும். நான் பழைய ஸ்ரீ.ல.சு.கட்சிக் காரன் என்ற வகையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றவன் என்ற வகையில் இதனைச் செய்ய முடியும் என நினைக்கின்றேன்.

எமது கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க இன்று உயிருடன் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதோடு முதலாவது பெண் ஜனாதிபதியும் கூட.  எனவே அவரது தலைமைத்துவத்தில், அவரது வழிகாட்டலின் கீழ் எமது கட்சியைப் பாதுகாக்க முடியும்.  இதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதற்கான அடித்தாளம் போடப்பட்டுள்ளது.

நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன். நான் ஒரு போதும் மொட்டுவுக்காக வேலை செய்யப் போவதில்லை. நான் மொட்டுவுக்கு வாக்களிக்கப் போவதுமில்லை. அதே போன்று நான் அன்னத்திற்கு வேலை செய்யப் போவதுமில்லை. இந்த தேர்தலில் மொட்டு வெற்றி பெற்றால் பண்டாரநாயக்காவின் ஸ்ரீ.ல.சு.கட்சி இனி மீதமிருக்காது.  இதுதான் உண்மை. இந்த உண்மையினை நாம் பேச வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சந்திரிக்காவுடன் இணைந்து கொள்வோம்! - முன்னிலை வகிப்பதற்கு தயார்” - வெல்கம | Tamil Leader | We Lead the Nation