அரசியல் செயற்பாட்டில் இணைந்து கொள்வதற்கு முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவருமான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அறிவித்துள்ளதாகவும், சந்திரிக்கா நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது வெளிநாடு சென்றுள்ள சந்திரிக்கா கடந்த சனிக்கிழமை நாடு திருப்ப இருந்த போதிலும் அவரது பயணம் சில தினங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
இதேநேரம், தான் ஒரு போதும் மொட்டு அல்லது அன்னத்தின் கீழ் அரசியல் செய்யப்போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீ.ல.சு.கட்சியை மீளக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். குமார வெல்கமவை மொட்டுவுடன் இணைந்து கொள்ளுமாறு மத்துகம நகரில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “எனது ஊரின் எனது ஆதரவாளர்கள் மொட்டு கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு என்னைப் பலவந்தப்படுத்துகின்றனர். எனினும் நான் எடுத்த தீர்மானத்தை மாற்றப் போவதில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குமார வெல்கம மற்றும் அர்ஜூனவும் ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்தில் சந்திரிக்காவடன் இணைவு!
T
The Leader Desk
அக்டோபர் 21, 2019 • 5:27 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அரசியல் செயற்பாட்டில் இணைந்து கொள்வதற்கு முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவருமான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
- இதேநேரம், தான் ஒரு போதும் மொட்டு அல்லது அன்னத்தின் கீழ் அரசியல் செய்யப்போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீ.ல.சு.கட்சியை மீளக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.
- இவர்கள் இருவரும் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அறிவித்துள்ளதாகவும், சந்திரிக்கா நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

