Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோத்தாபய கைது செய்யப்படுவதைத் தடுத்ததாக முன்னாள் நீதி அமைச்சர் ஏற்றுக் கொண்டார்!

T

The Leader Desk

அக்டோபர் 19, 2019 • 7:29 AM

கோத்தாபய கைது செய்யப்படுவதைத் தடுத்ததாக முன்னாள் நீதி அமைச்சர் ஏற்றுக் கொண்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடைகளை ஏற்படுத்தியதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீது அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவரது வாயினாலேயே நேற்று (18) ஏற்றுக் கொண்டார்.
  • இதனையடுத்து அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டதோடு அந்நேரத்திலிருந்து அவர் அரசாங்கத்துடன் முரண்பாட்டுக் கொண்டிருந்தார்.
  • எவ்வாறிருந்த போதிலும் இவர் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற பிரதமர் மாற்றத்தின் போது பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காத பலவந்தமான அரசாங்கத்தில் விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கியதோடு அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

தடைகளை ஏற்படுத்தியதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மீது அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவரது வாயினாலேயே நேற்று (18) ஏற்றுக் கொண்டார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்த விஜேதாச ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தான் தடுத்ததாகத் தெரிவித்தார்.

கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த கோத்தாபய ராஜபக்ஷவை சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவே என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்  மார்சல் சரத் பொன்சேனா அந்நேரம் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்திருந்தார்.

கடந்த ஆட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களும் விஜேதாச ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தியிருந்ததோடு, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.  இதனையடுத்து அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டதோடு அந்நேரத்திலிருந்து அவர் அரசாங்கத்துடன் முரண்பாட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் விஜேதாச ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்குவதாகவும்,  நாடு முழுவதிலும் சென்று கோத்தாபயவின் வெற்றிக்காரப் பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறிருந்த போதிலும் இவர் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி இடம்பெற்ற பிரதமர் மாற்றத்தின் போது பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காத பலவந்தமான அரசாங்கத்தில் விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கியதோடு அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தாபய கைது செய்யப்படுவதைத் தடுத்ததாக முன்னாள் நீதி அமைச்சர் ஏற்றுக் கொண்டார்! | Tamil Leader | We Lead the Nation