Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

எக்காரணத்திற்காகவும் அநுர விலகப் போவதில்லை! - பெசிலின் இரண்டாம் விருப்பு வாக்கு கெஞ்சல்!! (

T

The Leader Desk

அக்டோபர் 19, 2019 • 7:26 AM

எக்காரணத்திற்காகவும் அநுர விலகப் போவதில்லை! - பெசிலின் இரண்டாம் விருப்பு வாக்கு கெஞ்சல்!! (

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்த ராவய பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
  • கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடித்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்காக போட்டியிலிருந்து விலகுமாறு அநுர குமார திசாநாயக்காவிடம் ஐக்கிய தேசிய முன்னணி தரப்பினர் கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
  • என ராவய பத்திரிகை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலகப் போவதில்லை என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்த ராவய பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.  கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடித்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குவதற்காக போட்டியிலிருந்து விலகுமாறு அநுர குமார திசாநாயக்காவிடம் ஐக்கிய தேசிய முன்னணி தரப்பினர் கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என ராவய பத்திரிகை கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர குமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகுவதற்கோ, அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக சஜித் பிரேமதாசாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு மக்களிடம் கோருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் எதனையும் பேசுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராக இல்லை என்றும் விஜித ஹேரத் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்குமிடையில் எந்தவித மாற்றங்களையும் காண முடியவில்லை என்றும்,  எவராவது கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக அநுர குமார திசாநாயக்கா போட்டியிலிருந்து விலக வேண்டும் என எதிர்பார்த்து கோரிக்கை விடுத்தால்  அவர்களுக்கு கூற வேண்டியிருப்பது கோத்தாபயவை தோற்கடிக்க வேண்டுமாயின் சஜித் பிரேமதாசா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்றேயாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களிடத்தில் தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்ததாகவும், தமது கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியின் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிப்பார்கள் என்றும், மொட்டு கட்சிக்கு 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது என்பது அவர்கள் தெரிந்திருக்கின்றார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கா கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...