Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோத்தபாய நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டார்

T

The Leader Desk

அக்டோபர் 18, 2019 • 3:57 AM

கோத்தபாய நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இவ்வாறு செய்வதற்கு அவருக்கு வெட்கமில்லையா?
  • அவ்வாறு மின்சாரக்கதிரையில் ஏற்றுவதற்காகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
  • எனவும் கேள்வி எழுப்பினார்.
எழுத்து அளவு:

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இவ்வாறு செய்வதற்கு அவருக்கு வெட்கமில்லையா? முதுகெலும்பு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் கெகிராவ நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,கடந்த செவ்வாய்கிழமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் முன்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ தலைகுனிய நேர்ந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள். 

அடிப்படைவாதம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைத்து பக்கமும் திரும்பினாரே தவிர, அவரிடமிருந்து பதிலில்லை. இவ்வளவு காலமும் அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்தே பேசிவந்தார்கள். எனினும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மைகள் அனைத்தும் வெளிவந்துவிட்டது. 

கடந்த காலத்தில் அவர்கள் யாருக்கு ஜம்பர் அணிவித்து, யாரை சிறையில் அடைத்தார்களோ அவரே போருக்கு தலைமைத்துவம் வழங்கிய யுத்தவீரர் என்று சர்வதேச ஊடகங்களின் முன்நிலையில் அவர்களுடைய வாயாலேயே ஏற்றுக்கொள்ளளும்படி நேர்ந்துவிட்டது. 

இராணுவத்தினரை தண்டிப்பார்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றுவார்கள் என்றெல்லாம் கடந்த காலத்தில் கூறினார்கள். அவ்வாறு மின்சாரக்கதிரையில் ஏற்றுவதற்காகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பதில் 'காட்டிக்கொடுப்பு'. 

ஆனால் பிரேமதாசவினர் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் அல்ல. சர்வதேசத்தில் எவரொருவரைக் கண்டும் நான் அஞ்சவில்லை இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தபாய நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டார் | Tamil Leader | We Lead the Nation