Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்! சரத் பொன்சேகா

T

The Leader Desk

அக்டோபர் 16, 2019 • 5:37 PM

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்! சரத் பொன்சேகா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
  • அடுத்ததாக தேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்ற கோத்தாய ராஜபக்ஷ 15 வருடங்கள் அமெரிக்காவில் வசித்தார்.
  • ஒருவர் 20 வருடம் இராணுவத்தில் சேவையாற்றினால் அவர் ஓய்வூதியத்தைப் பெற்று ஓய்வுபெற முடியும்.
  • கோத்தாபய ராஜபக்ஷவும் 20 வருடம் பூர்த்தியடைந்த பின்னர் ஒருநாள்கூட பணியில் இருக்கவில்லை.
எழுத்து அளவு:

விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி இன்று வாரியபொல நகரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகுவதற்கு முன்னர் அவருக்கு மிகச்சொற்ப நண்பர்களே இருந்தனர். அப்போது நானும் அவருடைய சிறந்த நண்பர். ஒருநாள் அவர், 'தற்போது என்னுடைய சட்டைப்பையில் இருக்கின்ற இரண்டு ரூபாய் பல மாதங்களின் பின்னரும் அப்படியே இருக்கும்' என்று கூறினார். இதிலிருந்து அவர் அரசியல் ஊடாக மக்களின் பணத்திலேயே வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்பது தெளிவாகின்றது. இத்தகைய நபர்களிடமா மீண்டும் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்கள்?

அடுத்ததாக தேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்ற கோத்தாய ராஜபக்ஷ 15 வருடங்கள் அமெரிக்காவில் வசித்தார். ஒருவர் 20 வருடம் இராணுவத்தில் சேவையாற்றினால் அவர் ஓய்வூதியத்தைப் பெற்று ஓய்வுபெற முடியும். கோத்தாபய ராஜபக்ஷவும் 20 வருடம் பூர்த்தியடைந்த பின்னர் ஒருநாள்கூட பணியில் இருக்கவில்லை. அவர் இன்றும் வெட்கமில்லாமல் எமது அரசாங்கம் வழங்கும் இராணுவத்திற்கான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்கின்றார். மஹிந்த குடும்பத்தினர் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடிப்பதை சுனாமியின் போதிலிருந்து ஆரம்பித்தனர். தமது பெற்றோருக்கு நினைவுமண்டபம் அமைப்பதற்காக கொள்ளை அடிப்பவர்கள் மஹிந்த குடும்பத்தை தவிர வேறு யாராக இருக்க முடியும்? இத்தகையவர்களிடம் இருந்து மக்கள் எதனை எதிர்பார்க்க முடியும்?

அதேபோன்று கடந்த ஆட்சியில் கொழும்பை சுத்தப்படுத்துவதற்கு அபான்ஸ் ஊழியர்கள் 3000 பேர் பணிபுரிவதாகவும், அவர்களுக்கு 35000 ரூபா வீதம் செலுத்தப்படுவதாகவும் கோத்தாபாய ராஜபக்ஷ காண்பித்தார். ஆனால் உண்மையில் 1500 ஊழியர்களே பணியாற்றியுள்ளனர். எனவே எஞ்சிய 1500 பேருக்காக வழங்கப்பட்ட மாதாந்த ஊதியம் தலா 35000 ரூபா கோத்தபாயவினால் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் சரத்பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்! சரத் பொன்சேகா | Tamil Leader | We Lead the Nation