Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

த.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம்: விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள

T

The Leader Desk

அக்டோபர் 16, 2019 • 5:29 PM

த.தே.கூ.வுடன் மேற்கொண்ட ஒப்பந்தம்:  விரைவில் வெளிப்படுத்துவோம் -மங்கள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
  • புலிகளிடம் திரைமறைவில் நிதிபெற்று மஹிந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைப்போன்று நாம் செயற்பட்டதில்லை.
  • எம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.
எழுத்து அளவு:

பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியை ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை. புலிகளிடம் திரைமறைவில் நிதிபெற்று மஹிந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைப்போன்று நாம் செயற்பட்டதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பில் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம். எம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். அதனூடாக பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் எவ்வித இன,மத பேதங்களுமின்றி அனைவரையும் ஒற்றுமையுடன் வாழச்செய்வதற்கான சஜித் பிரேமதாஸவின் தூரநோக்கு சிந்தனையை விளங்கிக்கொள்ள முடியும்.

அதேபோன்று மறுபக்கத்தில் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத்தினரை பாதுகாத்த ஒருவரைப் போன்று சித்தரிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் உண்மையில் கோத்தபாய ராஜபக்ஷ என்பவர் நாட்டில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்ற ஒருவராவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...