கோத்தாபய ராஜபக்ஷவை ஊக்குவித்து கடந்த வார இறுதி பத்திரிகைகள் சிலவற்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரம் தொடர்பில் விசாரணையினை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“அது தவறானது என்பதை நாம் குறித்த வேட்பாளரின் கட்சிக்கு அறிவித்துள்ளோம். அதே போன்று ஜனாதிபதி செயலாளருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இது தொடர்பில் பதிலளிக்குமாறு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்” என இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
தற்போதை இராணுவத் தளபதி லெட்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர், புகைப்படத்துடனான கருத்தைப் போட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்திரிகை விளம்பரம் செய்திருப்பது கடுமையான தேர்தல் சட்ட மீறலாகும் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் அமைச்சர் அஜித் பீ.பெரேராவினால கடந்த 14ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தற்போதைய இராணுவத்தளபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் சீருடையுடனான புகைப்படங்களை அரசியல் கட்சியின் ஊக்குவிப்புக்காகப் பயன்படுத்துவது தவறான செயலாகும் என்றார்.
“அது பழைய கூற்றுக்களாக இருக்கலாம். எனினும் தற்போதைய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ பெயர், பதவியைப் பிரசுரித்து அதனை பயன்படுத்துவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். இது எந்தவித சிறந்த அரசியல் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவை அல்ல” என்றும் அவர் கூறினார்.
கோத்தாபயவின் விளம்பரங்களில் இராணுவ தளபதியைப் பயன்படுத்துவது தவறானதாகும் - தேர்தல் ஆணைக்குழு
T
The Leader Desk
அக்டோபர் 16, 2019 • 5:25 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கோத்தாபய ராஜபக்ஷவை ஊக்குவித்து கடந்த வார இறுதி பத்திரிகைகள் சிலவற்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரம் தொடர்பில் விசாரணையினை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- அதே போன்று ஜனாதிபதி செயலாளருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இது தொடர்பில் பதிலளிக்குமாறு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்” என இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
- இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தற்போதைய இராணுவத்தளபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் சீருடையுடனான புகைப்படங்களை அரசியல் கட்சியின் ஊக்குவிப்புக்காகப் பயன்படுத்துவது தவறான செயலாகும் என்றார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

