Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இந்தியா தனது முதலாவது டெங்கு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது

T

The Leader Desk

ஜூலை 20, 2026 • 1:26 PM

இந்தியா தனது முதலாவது டெங்கு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கமைய, இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமைப் பணிப்பாளரினால் (DCGI) 'QDENGA' எனப்படும் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • வயது தொடக்கம் 60 வயது வரையான நபர்களுக்கு இந்தத் தடுப்பூசியை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத எவரும் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆம் ஆண்டு முதல், 'QDENGA' தடுப்பூசியானது 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
  • டெங்கு பரவல் அதிகமுள்ள பிராந்தியங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்தத் தடுப்பூசியைப் பரிந்துரைத்துள்ளது.
எழுத்து அளவு:

இதற்கமைய, இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமைப் பணிப்பாளரினால் (DCGI) 'QDENGA' எனப்படும் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

4 வயது தொடக்கம் 60 வயது வரையான நபர்களுக்கு இந்தத் தடுப்பூசியை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத எவரும் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு முன்னர் எவ்வித முன்திரையிடல் பரிசோதனைகளும் (Pre-vaccination testing) அவசியமில்லை எனவும் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

0.5 மில்லிலீற்றர் அளவிலான இரண்டு தடுப்பூசி அளவுகளாக (Doses), மூன்று மாத கால இடைவெளியில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு முதல், 'QDENGA' தடுப்பூசியானது 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டெங்கு பரவல் அதிகமுள்ள பிராந்தியங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்தத் தடுப்பூசியைப் பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசிக்கு முந்தைய பரிசோதனைகள் தேவையில்லை என்பதால், அதிக பரம்பலைக் கொண்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பொது நோய் எதிர்ப்புத் திட்டங்களில் இதனை உள்வாங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த 'QDENGA' தடுப்பூசியானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்தகைமை (Pre-qualification) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், இதன் மூலம் சர்வதேச தரம், பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்துள்ளமையானது, இந்தியா எடுத்துள்ள ஒரு பாரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெங்கு பரவல் அதிகமுள்ள மற்றும் பரவல் அற்ற பிராந்தியங்களைச் சேர்ந்த 28,000 பேரை உள்ளடக்கி, முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக நடாத்தப்பட்ட 19 மருத்துவப் பரிசோதனைகளின் (Clinical Trials) பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4 வயது முதல் 60 வயது வரையான நபர்களின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்து, இந்தியாவில் நடாத்தப்பட்ட 'Phase III DEN-302' மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளும் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக அமைந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியா தனது முதலாவது டெங்கு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது | Tamil Leader | We Lead the Nation