பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 84.46 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.39 சதவீத அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 90.41 அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளது. இது 2.62 சதவீத விலையேற்றமாகும்.
மறுபுறம், மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலையும் 81.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது 4.62 சதவீத உயர்வாகக் காட்டுகின்றது.
விலையேற்றத்திற்கான காரணம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய யுத்த பதற்ற சூழல் காரணமாக, எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சமே கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.
இதேவேளை, இந்த யுத்த மோதல்கள் தொடர்ந்தும் நீடிக்குமாயின், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


